இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக மூத்த விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள ஊடகத்தில் வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி இடையிலான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடந்த வாரம் ரஷ;யாவுக்கு சென்று ஜனாதிபதி விளாடீமிர் புடினை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார். இதனடிப்படையில் எதிர்வரும் குளிர்காலத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் புதிய பரிமாணத்தை நோக்கி செல்லும். இது மேற்குலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமையும்.
இலங்கையில் போர் நடைபெற்ற போது, சீனா, இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கு பதிலாக தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியது. தற்போது ரஷ்யா சம்பந்தமாகவும் நடப்பது அதே நிலைமையே எனவும் மகிந்த பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.