2021ஆம் ஆண்டு பிறந்த மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளதும் பிறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் கீழுள்ள பிறப்புச்சன்றிதழுக்கு மாற்றப்படவேண்டுமென அரசாங்கத்தால் கட்டாய அறிவித்தல்விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது 2021, 2022, 2023, 2024 இக்காலப் பகுதிவரை அரசாங்கத்தால் பழைய பிறப்புச் சான்றிதழே பாவணையிலிருந்த நிலையில், புதிதாக அரசாங்கத்தால் அறிமுகம் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ்களுக்கு தமது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி படிவத்தை தங்களது பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ளமுடியுமென்பதோடு, புதிதாக மாற்றப்படும் எந்தவொரு சான்றிதழ்களுக்கும் எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்றும் அரசாங்கம்அறித்துள்ளது.
இனிவரும் காலங்களில் புதிதாக அச்சிடப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ்களைக் கொண்டே அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதுடன், மேற்படி சான்றிதழ்களை நிரப்பும் போது ஆங்கிலம்மற்றும் சிங்களம் என இரு மொழிகளிலும் பிறப்புச் சான்றிதழ்கள் நிரப்பப்படும். அதேவேளை தங்களது பிள்ளைகளின் பழைய பிறப்புச் சான்றிதழ்களில் ஏதேனும்பிழைகள் இருப்பின் அவற்றையும் புதிதாக நிரப்பப்படும் சான்றிதழ்களில்திருத்திக் கொள்ள முடியுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் மேற்படி சான்றிதழ்கள் நிரப்பப்படும் போது தேசிய அடையாளஅட்டைக்கான இலக்கமுமம் அதே சான்றிதழில் பதிவிடப்பட்டு தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக் கொள்ளும் காலப் பகுதியில் பிறப்புச் சான்றிதழில்குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமே தேசிய அடையாள அட்டை இலக்கமாகவும்பதியப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேச செயலாளர் அல்லது கிராமஉத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.