இலங்கையின் சனத்தொகையில் மூன்று மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் மூன்று இலட்சம் பேர் நீரிழிவு நோயினால் பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் மங்கள தனபால தெரிவித்துள்ளார்.
பார்வையற்றவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களாவர். நிபுணர்களின் கூற்றுப்படி, கொழும்பு மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் புறங்களில் எட்டு வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், உலகளவில் 531 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கையில் 35 வீதம் அல்லது 145 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் ஏதேனும் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 643 மில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 783 மில்லியனாகவும் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளனர்-என்றார்.