கொஸ்வத்த, ஹால்தடுவன பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (பெப். 14) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசாலின் சகோதரரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினரான மொஹம்மட் பைசால் பாராளுமன்ற சபை அமர்வில்கலந்துகொள்வதற்காக வந்து கொண்டிருந்த வேளையில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில்வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது குறித்த காரை பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர்செலுத்தி வந்துள்ள நிலையில், கொஸ்வத்தை பொலிஸாரால் அவரை கைதுசெய்துள்ளனர்.