நெடுந்தீவு குறிகட்டுவான் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை மற்றும் குமதினிப் படகுகள் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக நெடுந்தாரகைப்படகு சேவையில் ஈடுபட்டது. அதற்கான எரிபொருள் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும் தற்போது நெடுந்தாரகைப் படகும் பழுதடைந்த நிலையில் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையில் ஈடுபடுகின்றது கொரோனா பாதுகாப்பு நிலமைகள் நடைபெறுவதால், போக்குவரத்து மேற்கொள்ளும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. போதிய வருமானம் இன்மையால் தொடர்சியாக மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டதால் படகுச் சேவை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இன்று (ஜீலை 02) இவ்விடயம் தொடர்பாக நண்பர்கள் வட்டத்தினால் அரசாங்க அதிபருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஆளுனருக்கு கடிதம் வழங்ப்பட்டு நேரடியாக சென்று உரையாடப்பட்டது. அதன் பிரகாரம் உடடினயாக அதற்கான தீர்வு உரியவர்களால் வழங்கப்பட்டது.
தற்போது பிரதேச சபைக்கு வழங்கப்படும் எரிபொருளினை பல.நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு வழங்கி மக்கள் போக்குவரத்தினை தடையின்றி மேற்கொள்ள ஆவண செய்யுமாறு பிரதேச சபையால் தொலை நகல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கான அனுமதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அவர்கள் பிரதேச சபை தலைவருக்கு வழங்கியுள்ளதுடன் தாங்கள் நெடுந்தாரகைப் படகு திருத்தம் செய்யும் வரைக்கும் பல .நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகினை பயன்படுத்துமாறும், அதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருளினை வழங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
அதற்கமைவாக தொடர்ச்சியாக பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையினை பயன்படுது;துமாறு பிரதேச சபை தலைவர் அவர்களால் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கடும் காற்று காலத்தில் மக்கள் சேவையினை வழங்கி வருவதுடன் ஊழியர்களது கொடுப்பனவு படகுத்தேய்மானம் என்பவற்றினையும் பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சியினையும் கவனத்திற்கொண்டு கட்டன அறவிட்டுடன் இடையூறாத பயன சேவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.