2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில்வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 11,148,006 பேர் வாக்களித்துள்ளதுடன், 5,992,348 பேர் வாக்களிக்கவில்லை. இம்முறை நாடளாவிய ரீதியில் 65 சதவீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன.
பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வியாழக்கிழமை (14) நாடளாவிய 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்புநடைபெற்றது.
2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்கமைய பொதுத்தேர்தலில்வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில்நாடளாவிய ரீதியில் 11,148,006 பேர் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்டமொத்த வாக்குகளில் 667,640 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில்11,815,246 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில்5,992,348 பேர் வாக்களிக்கவில்லை.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 3,820,738 பேர்வாக்களிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கமையவாக்களிப்பதற்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில், 13,319,616 பேர் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில்300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, 13,619,916 செல்லுபடியானவாக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன