பட்டதாரி மாணவியின் முயற்சியில் வன்னியில் உதயமான மரமுந்திரிகை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்!
போரின் சுவடுகளை சுமந்து நிற்கும் வன்னியில் தரமான மர முந்திரிகை தொடர்புடைய உற்பத்திகளை உற்பத்தி செய்யும் ஓர் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் பூநகரி மண்ணில் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தர நிரணயங்களை பின்பற்றி பாதுகாப்பாக, ரசாயனம் சேர்க்கப்படாத உற்பத்தி, மற்றும் கவர்ச்சிகரமான பொதியிடல் மூலம் சிறப்பான உற்பத்தி பொருட்களை வழங்கி வருகின்றது..
பட்டதாரி மாணவி ஒருவரின் எண்ணக்கருவிற்கமைய உருவாக்கப்பட்ட இந்த மரமுந்திரி உற்பத்தி தொழிற்சாலையும் அதன் விற்பனை நிலையமும் பூநகரி மண்ணில் வாடியடி சந்தியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் போது அமைந்துள்ளது.
உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் இடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளூரிலிருந்து கிடைக்கும் மரமுந்திரிகையை பாரம்பரிய முறைக்கமைய பதப்படுத்தி வெவ்வேறு வகையின் உற்பத்திகளாக வழங்கி வருகின்றனர். வெளிநாடுகளுக்கு உற்பத்திகளை அனுப்ப வைக்க கூடிய தரத்திலும் உள்ளது.
இப்பொருட்கள் ஒப்பீட்டு அளவில் விலை குறைவாக உள்ளதுடன் பொருளும் தரமாக உள்ளது. அதைவிட விற்பனை நிலையம் பாரம்பரிய முறையில் கவர்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
யாழ். கொழும்பு நெடுஞ்சாலையில் பூநகரி ஊடாக பயணிப்பவர் ஒருமுறை இச்சேவையை அணுகி பொருள்களை வாங்கி உள்ளூர் உற்பத்திகளை அதிகரியுங்கள்
சமூக நிறுவனங்களும் இவ் உள்ளூர் உற்பத்திகளை ஊக்கப்படுத்த வேண்டியது எம் எல்லோரதும் கடமையல்லவா..