பசுக்களைப் பாதுகாப்போம்” எனும் கருப்பொருளிலான கலந்துரையாடலொன்று அண்மையில் தீவகத்தில் யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் திரு .மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் தீவக சிவில் சமூகம் ( islands civil society ) அமைப்பின் பொருளாளர் திரு. கருணாகரன் குணாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் தீவகம் தெற்கு ( வேலணை) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . ஆக்கபூர்வமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் , கிராமசேவகர்கள் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செல்லப்பா பார்த்தீபன், ஆ.கோபாலகிருஸ்ணன், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் தா. ரெஜினா , தீவக சிவில் சமூக செயலாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர் .
பண்ணைகளை அமைத்து பசுக்களை பாதுகாப்பதற்கு புலம்பெயர் ஒன்றியங்களும் ,பொது அமைப்புக்களும் , கோயில் நிர்வாகங்களும் முன்வரவேண்டுமென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு ஏற்கனவே அதனை நடைமுறைப்படுத்திவருகின்ற அனலைதீவு புளியந்தீவு நாகேஸ்வர் ஆலய நிர்வாகத்தினருக்கும் மிகவிரைவில் பசுப்பண்ணை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .