நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினால் எதிர்வரும் ஓகஸ்ட் 04ஆம் திகதி – 10ஆம் திகதி வரை நெடுவூர் திருவிழாவகொண்டாடப்பட இருப்பதனால் , அதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (ஜூலை 19) வேலணை பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில் வேலணை பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது நெடுவூர் திருவிழாவில் பங்குபற்றுவோருக்கான படகுசேவை, முதலுதவி, தரைப் போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற பணிகளை முன்னெடுத்தல் தொடர்பாக இன்றைய முன்னாயத்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் வேலணை உதவி பிரதேச செயலாளர், சுகாதார வைத்தியஅதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து சபை, புங்குடுதீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் என்பவற்றை சார்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.