நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 சிறப்பான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் 07ஆம் நாள் (ஆகஸ்ட்10) நிகழ்வுகள் மாலை 3.00 மணியளவில் பெருமளவு உறவுகள் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இன்றைய நாளின் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் யாழ்மாநகர சபை முன்னாள் மேயர் ப. யோகேஸ்வரி மற்றும் ஈ.பி. டி. பி. இன் பிரமுகர்களுடன், இந்துமத குரு கா.புவனேந்திரசர்மா, அருட்பணி பி. யோகராஜ் அடிகள் , தென்னிந்திய திருச்சபை வணபோதகர் புலம்பெயர் உறவுகள் மற்றும் தீவினை விட்டு வெளியிடங்களில் வாசிப்போர் என பெருமளவானோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு மத தலைவர்களின் ஆசியுரையுடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
நிகழ்வின் போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதனது அரசியல் பயணத்தினை தொடங்கி 30 வருங்களானதை நினைவுகூரும் வகையில் 30 மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை சிறப்பாகும்.
இன்றையதினம் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களிற்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், இடம்பெற்ற விளையாட்டு, கல்வி தொடர்பான போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் வெளியீடு செய்யப்பட்ட முத்திரையின் சிறப்புப் பிரதிகளும் வழங்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கான சிறப்பு பரிசில்களை இன்றைய நிகழ்வின் விருந்தினர்கள் வழங்கி கௌரவித்ததுடன் புலம்பெயர் உறவுகள் , மற்றும் தாயகத்தின் ஏனைய பகுதி உறவுகள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எந்தவிதமான இடையூறுகளும் இன்றி கடந்த 04 திகதி ஆரம்பித்து இன்றுவரை (10) நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று இனிதே முடிவடைந்துள்ளது.