நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 சிறப்பான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் 07ஆம் நாள் நிகழ்வுகளை சிறப்பிக்க கடறதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவுக்கு வருகைதந்துள்ளார்.
\
வருகையின் போது நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் ஊரும் உறவும் நிறுவனத்தினர், கடசி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் ஒன்றுகூடி பெரு வரவேற்பை முன்னெடுத்திருந்தனர்.
நெடுந்தீவு வரவேற்பு வளைவுப் பகுதியில் மலர்மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து இசை நாட்டியத்துடன் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.