நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகவுள்ள “நெடுவூர்த்திருவிழா” முதல்நாள் நிகழ்வுகள் விபரம் கிடைத்துள்ளது.
ஆரம்பநாள் (ஆகஸ்ட் 04) காலை 10.00 மணிக்கு விருந்தினர்களை மாவிலித் துறைமுகத்தில் வரவேற்று அங்கிருந்து குதிரை பவனி மற்றும் பாரம்பரிய நடனத்துடன் தேவா கலாச்சார மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது.
தொடரந்து மண்டப வளாகத்தில் கலாச்சார கண்காட்சி, உணவுத்திருவிழா, உள்ளூர் உற்பத்திக் கண்காட்சி விற்பனை, பனை வளம், விவசாய கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை கண்காட்சி என்பன இடம்பெறும்.
இதேவேளை நெடுந்தீவு ஆயுள்வேத வைத்தியசாலையில் மூலிகைக் கண்காட்சி, சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயத்தில் கல்விக் கண்காட்சி, மகாவித்தியாலயத்தில் ஓவிய கண்காட்சி, பிரதேச சபை பொது நூலகத்தில் இலக்கிய கண்காட்சி என்பவற்றுடன் நெடுந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலயத்தில்
சுற்றுச்சூழல் கண்காட்சியும் , ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தில் அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானம் , உதய சூரியன் கழக மைதானம் என்பவற்றில் சம நேரங்களில் உதை பந்தாட்டப் போட்டியும் இடம்பெறவுள்ளது.
மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை தேவா கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெறும் என ஊரும் உறவும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து உறவுகளையும் சகல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு நெடுந்தீவின்அபிவிருத்திக்கான பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.