நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை விதுஜன்( கோபி )என்ற இளைஞர் நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 10) தொடக்கம் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவு கிழக்கு தீர்த்தக்கரையில் கடற்தொழில் நிமித்தம் பாவிக்கப்படுகின்ற தெப்பம் ஒன்று தரித்து இருந்ததாகவும் அதனையும் தற்போது காணவில்லை என்பதால் அத் தெப்பப்படகில் ஏறி அவர் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
இந்தப் படகானது ஏற்கனவே சேதமடைந்து இருந்ததினால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கடலில் மிதக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நெடுந்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் நேற்று முதல் கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்டதுடன் இன்று நெடுந்தீவில் உள்ள மீனவர் சங்கங்கள் அனைத்துக்கும் இத்தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மூலமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன இளைஞர் படகில் ஏறிச் சென்றதை எவரும் காணவில்லை என்பதுடன் சம்பவதினத்தன்று குறித்தபடகில் ஒருவர் கடலில் இருப்பதை கண்டுள்ளனர்.
இந்நிலையில் இளைஞரையும் படகையும் காணாத காரணத்தினால் அவர் படகை எடுத்துச் சென்றிருக்கலாமென்று சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் காணும் இலக்கங்களுக்கு தெரியப்படுத்தவும் . 0777208644 , 0779608870 , 0771254410