நெடுந்தீவு வைத்தியசாலை அருகில் உள்ள வீதியில் இருந்து இன்று (ஜூன்20) அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு 06 வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ்( அமல் -வயது 22) என்பவரது உடலே இரத்த வெள்ளத்தில் கிடந்து மீட்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயதங்களால் தாக்கப்பட்டே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதுடன் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
இச் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.