நெடுந்தீவு மாவலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவத்தின் தொடக்க நிகழ்வாக, பந்தற்கால் நாட்டும் விழா இன்று (மார்ச் 10) சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆலயத்தின் பிரதம குருவின் வழிபாடுகளுக்குப் பிறகு, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திருவிழா உபயகாரர்கள் இணைந்து வைபவப்பூர்வமாக பந்தற்காலினை நாட்டினர்.
மேலும், ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஏப்பிரல் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.