நெடுந்தீவு வன்தொண்டன் அறநெறிப் பாடசாலை திறப்புவிழா இன்று (நவம்பர் 26) காலை கோலாகலமாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து படங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டதை தொடர்ந்து சிவன் மானிட மேம்பாட்டு நிறுவன நிறுவுனர் சிவத்திரு. இ. கலியுகவரதன் , திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவத்திரு. சு. தியாகலிங்கம் ஆகியோர் இணைந்து பாடசாலையினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
பாடசாலையின் பெயர் பதாகையினை சிவன் மானிட மேம்பாட்டு நிறுவன இணைப்பாளர் தியாகலிங்கம் கபிலன் திரைநீக்கம் செய்து வைத்தார். நெடுந்தீவிலுள்ள அறநெறிப் பாடசலைகளின் மாணவர்களது கலைநிகழ்வுகளும், விருந்தினர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சிவன் மானிட மேம்பாட்டு நிறுவன வளவாளர் கலாநிதி தனலட்சுமி மகாதேவன் , பாடசாலை அதிபர்கள் , நெடுந்தீவு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி, அறநெறி மாணவர்கள் , சமய ஆர்வலர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.