நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் நேற்றையதினம் (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில் 04 ஆம் நாள் நிகழ்வாக நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் அரும்பொருட்களின் கண்காட்சி மற்றும் மாதிரி விற்பனைச் சந்தை கண்காட்சி என்பன இன்றைய நாள் (ஆகஸ்ட் 07) விருந்தினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
04 ஆம் நாளாகிய இன்று (ஆகஸ்ட்07) புலம் பெயர் உறவுகளின் ஒன்றிணைவு , வடமாகாண விவசாயத் திணைக்களத்தினர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைவுடன் இன்றைய நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் தேவைகள் இனங்காணப்பட்டு அவற்றினை தீர்ப்பதற்கான உறவுகளின் சம்மதமும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வுகளில் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் , திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.