வாசிப்பை நேசிப்போம் என்ற பொருட் செறிவுடன் நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்கும் க. பொ. த. சாதாரண தர, உயர் தர மாணவர்களை வாசிப்பில் ஈடுபடுத்தும் ஒரு திறனாய்வுத் தேர்வு இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்து அவற்றுள் ஒரு நூலைத் தேர்ந்து வாசித்து அந்நூல் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுதி “பொறியியலாளர் அமரர் கே.யோகேந்திரன் நினைவு நூல் வாசிப்புத் திறனாய்வு”
வாசிப்பை நேசிப்போம்
மே/பா செ மகேஷ்
11ம் வட்டாரம் நெடுந்தீவு
என்ற முகவரிக்குத் தபாலிடவும்.
ஒவ்வொரு வாசகரும் தாம் ஆய்வுக்குத் தேர்ந்த நூலின் பெயரையும் அதனை எழுதிய நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரையும் குறிப்பிடுதல் வேண்டும்.
ஒவ்வொரு கட்டுரையும் மாணவர் கற்கும் பாடசாலை வகுப்பாசிரியரின் பார்வைக்குத் தரப்பட்டது என்பதை உறுதி செய்து வகுப்பு ஆசிரியரின் ஒப்பம் பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
கிடைக்கப்பெறும் கட்டுரைகள் தரம் காணப்பட்டு சிறந்த நூலாய்வுக் கட்டுரைகளுள் முதல் மூன்று இடங்களுக்கு முறையே
முதலாம் இடம் ரூபாய் 50 000/=
இரண்டாம் இடம் ரூபாய் 25 000/=
மூன்றாம் இடம் ரூபாய் 10 000/= என்றவகையில் பணப் பரிசுகள் வழங்கப்படும்.
2023.10.15 ஆம் திகதிக்கு முன்னர் கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டும்.
திறனாய்வுக கட்டுரைகளை எழுதி அனுப்பும் ஒவ்வொருவருக்கும் சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
இது மாணவரிடையே நூலகத்தைப் பயன் கொள்ளத் தூண்டும் ஒரு சிறிய முயற்சியாகும்.
அதிபர் ஆசிரியர் பெற்றோர் யாவரும் இதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க முன்வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.