நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ மாது இன்மையால் கர்ப்பிணிதாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிய வருகின்றது.
அண்மையில் கர்ப்பிணித் தாய் ஒருவர் தவறி விழுந்து அடிபட்ட நிலையில் அவருக்கான சிகிச்சை வழங்கவும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் மருத்துவ மாது ஒருவர் இன்மையால் பெரும் நெருக்கடிகளை வைத்தியசாலையினர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிரந்தர மருத்துவ மாது ஒருவர் இன்மையால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை.நீண்ட தொலைவில் உள்ள இத்தீவில் இருந்து அவசர நோயாளர்களை கொண்டுசெல்வதாக இருந்தால் கடல் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டுபின்னர் தரைவழி அம்புலன்ஸ் ஊடாக என இரண்டு மணி நேரங்களிலிலேயே வைத்தியசாலையினை அடைய முடியும், இந்த நிலையில் அண்மையில் தாய் ஒருவர் கடல் அம்புலன்ஸ் படகிலேயே குழந்தையை பிரசவித்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
எனவே நிரந்தர மருத்துவ மாது ஒருவரை நியமித்து வைத்தியசாலை பணிகளை சீராக கொண்டு செல்ல உரிய அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.