முதியோர்களுக்கான ஆன்மீக சுற்றுலா எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் சங்க உறுப்பினர்கள் பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள் எனபவற்றினை நேற்று(நவம்பர் 6) தரிசித்திருந்தனர்.
நெடுந்தீவில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் 35 பேர் நேற்று காலை யாழ் நகரில் இருந்து சிறப்பு பேரூந்து மூலம் முறிகண்டி பிள்ளையார் ஆலயம், வ்வுனியா கல்வாரிமலை, ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் என்பவற்றினை தரிசித்து மாலை யாழ்நகர் திரும்பியுள்ளனர்.
திருமுறிகண்டிப் பகுதியில் வைத்து சுற்றுலா ஆரம்ப நிகழ்வாக கேக் வெட்டி மகிழப்பட்டதுடன் அதில் வைத்து நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் இணைப்பாளர் மு. அமுர்தமந்திரனால் அமைப்பின் சார்பில் சுற்றுலாவுக்கான செலவின் ஒருபகுதிக்கான பணத்தொகையும் வழங்கப்பட்டதுடன் அவரும் சுற்றுலாவில் இணைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆன்மீக சுற்றுலாவில் நெடுந்தீவு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் , கலாச்சார உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் அலுவலர்கள் என்போர் கலந்துசிறப்பித்தனர்.