நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த சேவை வழங்குநர்களுக்கு சுற்றுலாப் பணியகத்தால் வழங்கப்படும் “Tourist Friendly Service Provider” sticker இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 23) இடம்பெற்ற பயிற்சிநெறியின் இறுதியில் வைபவ ரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் , மேலதிக அரசாங்க அதிபர் மா. பிரதீபன் , வடமாகாண சுற்றுலா பணியகத்தின் அலுவலர்கள் , நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
இதேவேளை சுற்றுலாத்துறை சார்ந்த சேவை வழங்குநர்களான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சிறிய மற்றும் பெரிய பேருந்து ஓட்டுநர்கள், டக்சி சாரதிகள் (மகிழுந்து ஓட்டுநர்கள்) சுற்றுலா சார்ந்த கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த உணவகங்கள் மற்றும் தங்குமிட உரிமையாளர்கள் , கடல்சார் விளையாட்டுக்களை வழங்குபவர்கள் என சுமார் 45 பேர் கலந்து கொண்டிருந்த பயிற்சிநெறியின் போது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடன் சேவை வழங்குனர்கள் சங்கம் ஒன்றினையும் அமைப்பதற்கான ஆரம்ப வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் விருத்திப் பயிற்சி நெறி நேற்றும் (22) இன்றும்(23) வட மாகாண சுற்றுலாப் பணியகத்தினரால் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இரு நாட்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.