நெடுந்தீவு சுற்றுலாத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஏற்பட்டிருந்ததாமதத்தையடுத்து, உடனடியாக நேரடி களப் பயணம் சென்று திட்டத்தை தாமதமின்றி ஆரம்பிக்ககௌரவ ஆளுநர் விடுத்த பணிப்புரைக்கு அமைய, வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், உள்ளூராட்சி அமைச்சு, சுற்றுலா பணியகம், கட்டடங்கள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், பொறியியலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் குழு நேற்றையதினம் (ஜூலை 04) நெடுந்தீவில் களப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், கடற்படை அதிகாரிகள், சுற்றுலாத்துறை சார்ந்தோர், பொதுமக்கள் என பலதரப்பினருடனும் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் 95 மில்லியன்ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
குறித்த தினத்தில் மேற்கொண்ட களப்பயணம் தொடர்பான அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டு நெடுந்தீவு சுற்றுலா அபிவிருத்தி பணிகள் துரிதமாகமுன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.