நெடுந்தீவு கோட்டப் பாடசாலைகளின் மாணவர்களுக்கான சாரணர் பயிற்சி முகாம் இன்றையதினம் (ஜூலை 25) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினரால் முன்னெடுக்கப்படும் முழுமையான மூன்று நாள் சாரண பயிற்சியில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளினைச் சேர்ந்த 120 சாரணர்களும் 25 குருளைச் சாரணர்களும் பங்கெடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இப் பயிற்சி நெறியானது சாரணர்களுக்கு 03 தினங்களும், சாரண ஆசிரியர்களுக்கு நாளையும்(26) நாளை மறுதினமும்(27) 02 தினம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை நாளை மறுதினம் (ஜூலை 27) பயிற்சி பெற்ற சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நிகழ்வுகளில் பயிற்சிநெறிக்கான வழிகாட்டலை வழங்கி நெறிப்படுத்திய யாழ் மாவட்ட அரசஅதிபரும் , யாழ் மாவட்ட சாரண ஆணையாளருமான ம.பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.