நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் “நல்வாழ்வுநம்கையில்” என்ற தொனிப்பொருளில் இவ் ஆண்டுக்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நெடுந்தீவு மத்திய பகுதியில் பூசணி செய்கைக்கான இடம் தெரிவு செய்யப்பட்டு வைபவ ரீதியாக பூசணி விதைகள் நாட்டப்பட்டன.
இத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் விவசாய செயற்திட்டத்தின் மூலம் பெருமளவு பூசணிக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.