இலங்கைத்தீவை பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் பசுந்தரை நிறுவனம் , நெடுந்தீவுஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து நெடுந்தீவில் மரநடுகை திட்டநிகழ்வினை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் நெடுந்தீவில் உள்ள சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. விதியாலயம், சுப்பிரமணிய வித்தியாலயம் , மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயம் என்பவற்றுக்கு நிழல்தரும் மரங்களும் , மூலிகை மரங்களும் நெடுந்தீவு ஊரும் உறவும் நிர்வாகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.
ஏற்கனவே மரக்கன்றுகள் கடந்த ஜூலை மாதம் நெடுந்தீவு பிரதேசவைத்தியசாலைக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கு பசுந்தரை நிறுவனத்தினர் மற்றும் நெடுந்தீவு பிரதேசஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.