நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் HYBRID INTERNATIONAL HUB(PVT) LTD நிறுவனத்தின் அனுசரணையுடன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு இன்று(ஒக்ரோபர் 12) பிற்பகல் 1:30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய உள்ளக மண்டபத்தில் நடைபெற்றது.
ஊரும் உறவும் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு. அமிர்தமந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சு. கபிலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் எவ். சி. சத்தியசோதி சிறப்பு விருந்தினராகவும் HYBRID INTERNATIONAL HUB(PVT)LTD நிறுவனத்தின் பணிப்பாளர் மா. பரமேஸ்வரன், ஆறுதல் நிறுவன செயற்திட்ட முகாமையாளர் கலாநிதி வி. ஜெயாமுருகன் , வடமாகாண பல. நோ. கூ. சங்கங்களின் சமாச முகாமையாளர் சி. ஜீவநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் , இந்து, கத்தோலிக்க மதகுருமார், நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர், அதிபர், ஆசிரியர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து நிகழ்வினை அலங்கரித்தனர்.
சித்தியடைந்த 13 மாணவர்கள் பதக்கம் அணிவித்து நினைவுச் சட்டகம் வழங்கி விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் விருந்தினர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.