நெடுந்தீவு பிரதேச மின்சார விநியோகத்தில் இணைக்கப்பட்டுள்ள பாரிய மின்இயந்திரம் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான மின்விநியோகம் சீராக வழங்க முடியாதுள்ளதாக மின்சாரசபையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தினமும் அதிகாலை 1.00 மணி முதல் 3.00 மணி வரையும் , காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையும் மாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பாரிய இயந்திரத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வரை இவ் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என்பதுடன் நேரமாற்றம் தொடர்பில் தகவல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுவதுடன், மின் இயந்திரத்தினை திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.