நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நெடுந்தீவு சமுர்த்தி பிரிவினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (டிசம்பர்09) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.நகுலறாணி அவர்களின்தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதியாக நெடுந்தீவு பிரதேசசெயலாளர் நிவேதிகா கேதீசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு 2023, 2௦24 ஆண்டுகளில்கொடி விற்பனை ஊடாக சேகரிக்கப்பட்ட நிதிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.