நெடுந்தீவை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்கதையாக இருப்பது தொடர்பில் நேற்று(நவம்பர் 22) நேரடியாக கண்டுகொண்டதாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடன் சேவை வழங்குநர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சி நெறியில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் வளவாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை நெடுந்தீவுக்கு செல்வதற்காக வந்த சுற்றுலாப் பயணிகளை பயணிகள் படகில் இடநெருக்கடி காரணமாக துறைமுகப்பகுதியில் விட்டுச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
சுற்றுலாப் பயணிகளை விட்டுச் செல்கின்ற போது நெடுந்தீவுக்கான போக்குவரத்து சீரின்மை என காரணம் காட்டி அவரகளின் வருகை குறைவடையும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை படகு சேவையின் போது நெடுந்தீவு மக்கள் மற்றும் நெடுந்தீவில் பணியாற்றும் அரச பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இடமிருப்பின் ஏனையோர் ஏற்றப்படுவது வழமைமையான செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.