நெடுந்தீவு பிரதேசத்தில் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவோர் மற்றும் வளத்தேவைகளை அறிந்து கொள்வதற்கான தகவல் திரட்டும் நோக்கத்துடன் வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசங்களின்சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் இன்று (ஜூன் 03) காலை
நெடுந்தீவு பிரதேச செயலகமண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கருத்துப் பரிமாற்றம், மற்றும் எவ்வாறு மழைநீர் சேமித்தலும் அதனுடாக சிறு விவசாயம் செய்தல், சிறு கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன் பிடியும் மற்றும் பதனிடல், உப உணவுச்பயிர் செய்கைகளை ஊக்குவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.
ஆறு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல் மற்றும் மகளிருக்கான சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணசிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர், சிக்கனகடனுதவு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து பிரதிநிதி மற்றும் இதன் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.