நெடுந்தீவு திருலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் இன்றையதினம் (ஜனவரி 21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அமலதாசன் மதன்குமார் (மதன் – வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குடும்பத் தகராறு காரணமாக தனித்து வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சகோதரியின் வீட்டு நிகழ்வுக்காக வீட்டிலிருந்தோர் சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இதேவேளை இன்று (ஜனவரி 21) மாலை உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றவேளை கதவு வழியாக குருதி வடிந்திருப்பதை கண்டு, கதவினை உடைத்து சென்றவேளை வீட்டின் விறாந்தையில் தூக்குகயிறு அறுந்தநிலையில் இறந்து காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரியவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் இறப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் நாளை காலையே முன்னெடுக்கப்படும் என தெரியவருகின்றது.