கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம்திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு செல்வதற்கான படகு கட்டண விபரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000 ரூபாவும் குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கான ஒருவழிக்கட்டணமாக 1300 ரூபாவும் அறவிடுவது என இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முன்னேற்பாட்டு கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கச்சதீவுக்கான சேவையில் ஈடுபடும் படகுகள் பொதுமக்களின்போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் உள்ளதற்கான சான்றிதழ்களைகடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும்தீர்மானிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.