நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக மாகாண சபையினால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட நெடுந்தாரகைப் படகு நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நேற்றைய தினம் (மே – 21) மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது.
குமுதினிப்படகு பழுதடைகின்ற சந்தப்பங்களில் அதற்கான எரிபொருள் வழங்கப்பட்டு நெடுந்தாரகை படகு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் குமதினிப்படகு பழுதடைந்த காலப்பகுதியில் இருந்து நெடுந்தாரகைப்படகு பழுதடைந்திருந்;தே காணப்பட்டது.
தற்போது திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் தனது சேவையினை ஆரம்பித்துள்ளது நெடுந்தாரகை படகு.
பயணத்தடை நீக்கப்பட்டதும் நாளுக்கு இரண்டு தடவைகள் நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடும் எனவும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துடன் கலந்துரையாடி குமுதினிப்படகு போன்று 03 தடவைகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதேசசபை தவிசாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நெடுந்தாரகைப்படகின் பராமரிப்பு வேலைகளை றேம்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றது.