நாடளாவிய ரீதியில் நாளை (மார்ச் 15) முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ளது.
அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் நாளை கடமைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரிய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தி.சிவரூபன் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
அதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டக் கிளையும் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியதுடன், நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் வவுனியா பழைய பஸ் நிலையத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
நாடளாவிய ரீதியில் நாளை நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். நாளை பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முழுமையாக முடங்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.