9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படகு வழியாக நாடாளுமன்றத்திற்கு வந்து செய்தியில் இடம்பிடித்துள்ளார்.
கோட்டை மாநகரசபையின் முன்னாள் மேயர் மதுர விதானகே, இன்று தியாவன்ன ஏரியை படகில் கடந்து நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்களை ஏரிப்பயணத்தில் கவனம் செலுத்த ஊக்குவிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஜனாதிபதியின் முயற்சியினால் தியாவன்ன ஏரி புனரமைக்கப்பட்டதால் படகுப்பயணம் சுலபமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.