2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும்திங்கட்கிழமை (நவம்பர் 11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்தநேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்றும் (நவம்பர்07) நாளையும் (நவம்பர் 08) மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூலவாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரசநிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது