உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக அரச பணியாளர்கள் சம்பளமில்லாத விடுப்பு எடுத்துள்ளனர்.
மார்ச் 9ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாமையால் வேட்பாளர்கள் பலர் கடினமான நிலைமையை எதிர்கொள்கின்றனர்.
தேர்தல் செயன்முறை தற்போதும் தொடர்வதால் அவர் மீண்டும் பணிகளுக்குத் திரும்புவது தடைப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.