புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசாரஅலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும்தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு செய்த தேசியதைப்பொங்கல் பண்டிகை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் கெளரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் தலைமையில்நேற்றையதினம் (18.01) தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில்சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை ஆன்மீக மற்றும் கலாசாரவிழிப்புணர்வு நடைபயணம் சிறப்பாக நடைபெற்று கல்லூரி மண்டபத்தில்பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மதத்தலைவர்கள், இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, கடற்றொழி்ல்நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சறோஜா சாவித்திரி போல் ராஜ், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூகஉட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், புத்தசாசன மத மற்றும்கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமஹேதர திசாநாயக்க, தொழில் பிரதிஅமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான நஜித் இந்திக்க, கருணநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், வட மாகாணபிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாா் ஆகிய மாவட்டங்களின்அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள்தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த மூத்த கலைஞர்கள் மற்றும் யாழ்ப்பாணமாவட்ட கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துசிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.