“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இந்தியாகூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்குஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகைசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளும்எழுப்பப்பட்டன. அதில் விஜய் குறித்த கேள்விக்கு, “இந்துத்துவா சக்திகளைஅழிக்க விரும்பினால் விஜய் இந்தியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என அவர்கருத்து தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை பேசியதாவது: விஜய் அவருடைய மாநாட்டில் மதவாதசக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால்இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய்விரும்பினால், இந்தியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடையகொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒருகுடிமகனாகச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்