முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனபொதுப் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மோதரையில் இன்று (மார்ச்09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேசபந்து தென்னகோன், தொடர்ந்து நீதிமன்றத்தில்முன்னிலையாவதை தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரதுசொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய தற்போது பலகுழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கதெரிவித்துள்ளார்.
மேலும், தேசபந்து தென்னகோனுக்கு மறைந்துக்கொள்ள எவரேனும் உதவினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்புத்திக மனதுங்க கூறியுள்ளார்.