வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கலைஞர் ஒன்றுகூடல் நேற்று(செப்ரெம்பர் 28) சிறப்பாக இடம்பெற்றது.
கலைஞர்கள் ஒருவருக்கொருவர் தமது கலைகளின் நாட்டம் மற்றும் திறமைகள் குறித்து ஏனைய சக கலைஞர்களுடன் அறிமுகப்படுத்தி கொண்டதுடன்,
தமது சிறந்த கலைப் படைப்புக்களையும் வெளிப்படுத்தினார்கள்.
பிரதேசத்தின் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப்பதற்கு எடுக்க வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து விரிவாக இன்று ஆராயப்பட்டதுடன்
பிரதேசம் கொண்டுள்ள பாரம்பரியங்களை இழந்து விடாமல் எதிர்கால சந்ததியினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் பற்றி நேற்றைய ஒன்று கூடல் நிகழ்வில் வலியுறுத்தி கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.