தென்னை மரங்களை முறையற்ற விதத்தில் வெட்டும் செயற்பாட்டை தடுக்கும் முகமாக இனிவரும் காலங்களில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக தென்னை மரங்களை தறிக்க வேண்டுமாயின் பிரதேசசெயலாளர்களிடம் தென்னை மரங்களை தறிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறவேண்டும்
இதற்கான விசேட வர்த்தமானி இன்றைய தினம் வெளியிடப்பட்டது.
கௌரவ அருந்திக்க பெர்ணான்டோ( தென்னை,பனை,கித்துள்)இராஜாங்க அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி அவர்களுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பலனாக இன்றைய தினம் இவ் வர்த்தமானி வெளியடப்பட்டது குறிப்பிடத்தக்கது.