தேசிய விஞ்ஞான மன்றம் வருடாந்தம் பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞானஆய்வு போட்டியினை நடாத்திவருகிறது.
குறித்த போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு,28.02.2025 அன்றுவிண்ணப்ப இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் தரம் 9 தொடக்கம் 12 வரையான வகுப்பு மாணவர்கள் குழுவாக கலந்துகொள்ளவேண்டும்.
குறித்த போட்டியினை நடத்தும் நிறுவனம் அரச திணைக்களத்தின் கீழ்செயற்படுகின்ற போதிலும் போட்டிக்கான வழிகாட்டல் ஆவணங்கள் சிங்களம்மற்றும் ஆங்கில மொழிகளிலே காணப்படுகின்றது. போட்டி தொடர்பிலானஇணைப்பு https://www.nsf.gov.lk
குறித்த போட்டியில் தமிழ் பேசும் மாணவர்களை பங்கெடுக்க செய்யும்வகையிலான வழிகாட்டல் வேலைத்திட்டத்தினை சிறகுகள் அமையம் தன்னார்வரீதியில் மேற்கொள்ளவுள்ளது.
அதன் முதல் அங்கமாக இணையவழியிலான வழிகாட்டல் அமர்வு நாளையதினம் (17.02.2025 திங்கள் ) இரவு 8.00மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் மாணவர்களை பங்கெடுக்க வைக்கும் வகையில்அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அமையத்தின் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை முன் வைத்துள்ளார்கள்.
Zoom Meeting ID: 895 7016 5676
இதேவேளை 0743806936 இலக்கம் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம்மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சிறகுகள் அமையம் அறிவித்துள்ளது.