சுழிபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் போத்தல்கள் வீசப்பட்டு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இரவு, சுழிபுரம்- கல்விளான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் உரையாற்றும்போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர், இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு