“நெடுவூர்த் திருவிழாவினை” சிறப்புற நடத்துவதற்கு ஏதுவாக அதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பில் யாழ்ப்பாண நகரில் உள்ள நெடுந்தீவைச் சேர்ந்தோருக்கான ஆலோசனைக் கலந்துரையாடல் இன்று (ஏப். 27) சனிக்கிழமை மாலை 4. 30 மணிக்கு திருநெல்வேலி – கலாசாலை வீதியில் அமைந்துள்ள கலாமன்ற சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினால் Aug 04.2024 முதல் Aug 10.2024 வரை
மீண்டும் ஊருக்குப் போகலாம்”
எனும் தொனிப் பொருளில் நெடுந்தீவில் “நெடுவூர்த் திருவிழா” நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நெடுந்தீவைச் சேர்ந்த யாழ்நகரில் வசிக்கும் கணிசமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் விழா தொடர்பிலும் அதனுடனான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கான யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நெடுந்தீவு மக்கள் சார்பாக குழு ஒன்றும் இன்றையதினம் அமைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டோரில் சிலர் விழா தொடர்பான கருத்துக்களையும் , அதில் தங்களது பங்களிப்பு தொடர்பிலும் கருத்துரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.