ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக அரசாங்கஅலுவலகங்களுக்கு வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின்தலைவர் ஆர் .எம். ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 27 அங்குலநீளமானது என்றும் அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தற்போது வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் அரசாங்க அச்சகத்தில்பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் அரசாங்கஅலுவலகங்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் தற்போது இடம் பெற்றுவருகின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளைவிநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறைந்த அளவிலேயே இடம்பெறுகின்றனஎன்பதைக் குறிப்பிட்ட அவர், அதே சூழ்நிலையை தொடர்ந்து முன்னெடுப்பதற்குபூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வேட்பாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 65 தேர்தல் முறைப்பாடுகள்கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம்வரையான காலப்பகுதியில் மொத்தம் 666 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.