தனது நான்கு பிள்ளைகளையும் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டா பொலிஸ் பிரிவில் யஹலதென்ன பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் பிள்ளைகளின் தாயார் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து, ஆசாமி கைது செய்யப்பட்டார்.
கெலிஓயா பகுதியிலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய 38 வயதான சந்தேகநபரே கைதாகியுள்ளார். அவர் சில காலமாக பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். எனினும், அச்சம் காரணமாக தாயார் முறைப்பாடளிக்காமல் இருந்தார்.
எனினும், கணவரின் சில்மிஷங்கள் அதிகரித்து சென்றதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.
5, 8 மற்றும் 16 வயது மகள்கள் வரையும், 12 வயதான மகனையும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார்.