ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது உத்தியோகபூர்வ X தளத்தில் அறிவித்துள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலற்ற நாட்டை உருவாக்கும் தேவையை சுட்டிக்காட்டியுள்ள அவர், தமது X தளத்தில் #CrushCorruption என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
நாட்டின் வருமானத்தை அதிகரிக்க இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை முன்னேற்ற தம்முடன் சேர்ந்து பணியாற்றுமாறு சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.