நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவது தான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
அரசியலில் ஒரு சீரான தரநிலை அவசியம் எனவும், அது அரசியல்வாதிகளால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மொனராகலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
“நமது நாட்டில் அரசியலுக்கு ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதிகள் நினைத்தது போல் செயல்பட முடியாது, அது சாத்தியமே இல்லை. அரசியல்வாதிகள் ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட வேண்டும். அவர்கள் சட்டத்திற்கு உட்பட வேண்டியவர்கள். ஆனால், நமது நாட்டில் நிலைமை இதுபோல இல்லாது உள்ளது. இந்த நாடில் சட்டவிரோத வாகனங்களும், சுங்க கட்டணமின்றி வர்த்தகங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வாகனங்களும் காணப்படுகின்றன. சில வாகனங்கள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அத்தகைய சட்டங்கள் சிலருக்கு பொருந்தாது. இது தான் நமது நாட்டின் அரசியல் கலாசாரம். எனவே, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கொள்கையை நாங்கள் உயிர்ப்பிக்க முயல்கிறோம். எவர் யாராக இருந்தாலும், அவர் ஜனாதிபதியாகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தாலும், பொதுச் சொத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் விரும்புவதில்லை. எனவே, அரசியல் தரநிலை மேம்படுத்தப்படும்,” என்றார்.