இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் திரு.சாய் முரளி அவர்களைஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவுமாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சின்னராசாலோகேஸ்வரன், வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைதவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேசசபைதவிசாளர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி, வெங்கலச்செட்டிகுளம்பிரதேசசபையின் உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா மற்றும்பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோர்நேற்று (ஜூலை 16) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியதுணைத்தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது இந்தியாவின் ஒத்துழைப்புடன் கடந்தகாலங்களில்மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்அவர்கள் பாராட்டு தெரிவித்திருந்ததுடன் எதிர்காலத்தில்மேற்கொள்ளப்படவேண்டிய மேலும் பல விடயங்கள் தொடர்பில் தனதுஆலோசனை மற்றும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். குறித்த விடயங்கள்தொடர்பில் அதீத ஆர்வத்துடன் செவிமடுத்த இந்திய துணைத்தூதுவர், அவைதொடர்பில் எதிர்காலத்தில் நிச்சயம் கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குநேரடியாக விஜயம் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கைவிடுத்திருந்தார். அதன் பிரகாரம் குறித்த உள்ளூராட்சி சபைகளுக்கு நேரடியாகவிஜயம் செய்வதாக இந்திய துணைத்தூதுவர் தெரிவித்தமையும்குறிப்பிடத்தக்கது.
மேலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின்விசேட தேவைப்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், காணிஆக்கிரமிப்பு, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் உள்ளிட்டபல்வேறு முக்கிய விடயங்கள் பற்றி தவிசாளர்களினால் விரிவாக இந்தியதுணைத்தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாட்டிற்கும், வடக்கு மாகாண மக்களின்வளமான வாழ்விற்கும் அயல்நாடு என்கின்ற வகையில் எதிர்காலத்திலும்இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் என இதன்போதுஇந்திய துணைத்தூதுவர் குறிப்பிட்டார்.